நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தென்னிந்தியத் திரையுலகின் பிரம்மாண்டப் படங்களைக் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்தவர் தமிழ் இயக்குனரான ஷங்கர். பாகுபலி படங்களுக்குப் பிறகு அவருக்குப் போட்டியாக தெலுங்கு இயக்குனர் ராஜமவுலியும் வந்துவிட்டார். தன்னுடைய அடுத்த படமான ஆர்ஆர்ஆர் படத்தையும் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார் ராஜமவுலி.
தமிழ் நடிகர்கள் யாரும் இன்னும் பான்-இந்தியா அளவிற்கு வளராத காரணத்தால் இயக்குனர் ஷங்கரும் தெலுங்கு ஹீரோவான ராம் சரணுடன் இணைய முடிவு செய்துவிட்டார் போலிருக்கிறது.
ஷங்கர், ராம் சரண் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு நேற்றுமுன்தினம் வெளியானது. தன் மகன் ராம் சரண் அடுத்து இயக்குனர் ஷங்கருடன் இணைந்திருப்பது அப்பா சிரஞ்சீவிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
“கலைகளின் மாஸ்டர், எல்லைகளைக் கடந்து, தொலைநோக்குடன் செயல்படுவதில் முன்னோடி இயக்குனர் ஷங்கருடன் ராம் சரண் இணைவது சிலிர்ப்பாக உள்ளது. இந்திய சினிமாவில் தனி முத்திரை பதிக்கும் இயக்குனர்களுடன் அடுத்தடுத்த படங்களில் பணிபுரிவது மகிழ்ச்சி அளிக்கிறது,” என மகன் ராம் சரணை வாழ்த்தியுள்ளார் சிரஞ்சீவி.
தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் உருவாக்கப்படும் இப்படம், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.