நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

வெயில், அங்காடித்தெரு, காவியத்தலைவன் போன்ற வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் வசந்தபாலன். ஜிவி பிரகாஷ், அபர்ணதியை வைத்து இவர் இயக்கிய ஜெயில் படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் தான் படித்த விருதுநகர் பள்ளி நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார் வசந்தபாலன். அவரது தயாரிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்தில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்க இருக்கிறார்.
தனது புதிய படம் குறித்த தகவலை உற்சாகமாக தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அர்ஜுன் தாஸ். அதில், “இயக்குநர் வசந்தபாலன் மற்றும் அவரது குழுவுடனான இந்த புதிய பயணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். உங்களுடைய ஆசீர்வாதங்களும் பிரார்த்தனைகளும் தேவை” என அவர் தெரிவித்துள்ளார்.
அர்ஜுன் தாஸ் ஏற்கனவே கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் வில்லனாக மிரட்டியவர். அவரது கணீர் குரலுக்கென்றே தனி ரசிகர் வட்டாரம் உள்ளது. ஏற்கனவே இவர் அட்லி தயாரிப்பில் வெளியான அந்தகாரம் என்கிற படத்தில் ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.