மகிழ்திருமேனி இயக்கிய முதல்படமாக முன்தினம் பார்த்தேனே படத்தில் அறிமுகமானவர் லட்சுமி பிரியா சந்திரமவுலி. அதன்பிறகு சினிமா வாய்ப்பு இல்லாமல் சாந்தி நிலையம், தர்மயுத்தம் தொடர்களில் நடித்தார். மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார், கவுரவம், சுட்டகதை, கள்ளப்படம், யாகாவாராயினும் நாகாக்க, மாயா, ரிச்சி, டிக்கெட் உள்பட பல படங்களில் நடித்தார்.
முதன்முறையாக லட்சுமி பிரியா சோலோ ஹீரோயினாக நடித்துள்ள படம் யாமா. ஹீரோயின் சப்ஜெக்ட் படமான இதில் அவரது ஜோடியாக விஜு என்ற புதுமுகம் நடித்துள்ளார். சையத் இயக்கி உள்ளார். செந்தில்குமார் தயாரித்துள்ளார். எஸ்.சக்தி வேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். எல்.வி.முத்து கணேஷ் இசை அமைத்துள்ளார். முழுக்க முழுக்க த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது.