''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்த 'ஏலே' திரைப்படம் இன்று(பிப்.,2) வெளியாவதாக இருந்தது. ஆனால், தியேட்டர்களில் வெளியான 30 நாட்களுக்குப் பிறகுதான் ஒடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்ற உறுதிமொழி கடிதத்தைத் தராத காரணத்தால் படத்திற்கு தியேட்டர்களைத் தர தியேட்டர்காரர்கள் மறுத்துவிட்டனர்.
இதனால், கோபமடைந்த தயாரிப்பாளர் படத்தை விஜய் டிவியில் பிப்ரவரி 28ம் தேதி விஜய் டிவியில் நேரடியாக வெளியிடுகிறோம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். இதற்கு முன்பு மற்றொ டிவியில் 'நாங்க ரொம்ப பிஸி, புலிக்குத்தி பாண்டி' ஆகிய படங்கள் இப்படி நேரடியாக டிவியில் வெளியாகின.
'ஏலே' படத்தின் தயாரிப்பாளர்தான் தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' படத்தையும் தயாரித்துள்ளார். இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளிவந்தன. அப்போது தியேட்டர்காரர்கள் படத்தை தியேட்டர்களில் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். படத்தின் நாயகன் தனுஷ், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோரும் தியேட்டர் வெளியீட்டையே விரும்பினர்.
இந்நிலையில் படத்தை ஓடிடி தளத்தில் பெரும் விலைக்கு தயாரிப்பாளர் விற்றுவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 'ஏலே' படத்திற்காக தியேட்டர்காரர்கள் நெருக்கடி கொடுத்த காரணத்தால்தான் 'ஜகமே தந்திரம்' படத்தை ஓடிடியில் வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்தார் என்றும் சொல்கிறார்கள்.