வந்தாச்சு ‛விஜய் 67' அப்டேட் : ரசிகர்கள் குஷி, இந்தவாரம் முழுக்க கொண்டாட்டம் தான் | அதிரடியில் மிரட்டும் நானியின் "தசரா" டீசர் | தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் |
விஷால் நடித்த ஆக்சன் படம் மூலமாக மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி. அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் டைரக்சனில் தனுஷுடன் ஜகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்து விட்டார். இன்னொரு பக்கம் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல மலையாளத்தில் மூன்று படங்களுக்கு மேல் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் கோட்சே என்கிற படத்தின் மூலம் தற்போது தெலுங்கு திரையுலகிலும் கதாநாயகியாக அடியெடுத்து வைத்துள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி. இதுகுறித்த அறிவிப்பு கடந்த மாதமே வெளியான நிலையில், தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.. படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி. இளம் நடிகர் சத்யதேவ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தை கோபி கணேஷ் பட்டாபி என்பவர் இயக்குகிறார்.