அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
உலக அளவில் திரைப்படங்களுக்காக வழங்கப்படும் விருதுகளில் முதன்மையானதாகக் கருதப்படும் விருது ஆஸ்கர். அதில் பங்கு பெற பல்வேறு தகுதிக் கட்டங்கள் உள்ளன. சர்வதேசப் படங்களுக்கென தனி விருதும் உள்ளது. அதில் இந்த ஆண்டிற்கான தகுதிப் போட்டியில் உலக அளவில் 93 நாடுகள் கலந்து கொண்டன.
இவற்றில் அடுத்த சுற்றுக்கு 15 நாடுகளின் படங்கள் தேர்வாகி உள்ளன. அவற்றிலிருந்து அடுத்த கட்ட நாமினேஷன் சுற்றுக்கு படங்கள் தேர்வாகும். போஸ்னியா, சிலி, செக் குடியரசு, டென்மார்க், பிரான்ஸ், கவுதமாலா, ஹாங்காங்க, இரான், ஐவரி கோஸ்ட், மெக்சிகோ, நார்வே, ருமானியா, ரஷ்யா, தைவான் ஆகிய 15 நாடுகளின் படங்கள் மார்ச் 5 முதல் 9 வரை நடக்க உள்ள வாக்குப் பதிவில் கலந்து கொள்ள உள்ளன.
மார்ச் 15ம் தேதி நாமினேஷன் சுற்றில் உள்ள படங்கள் அறிவிக்கப்படும். ஏப்ரல் 25ம் தேதி விருது வழங்கும் விழா நடைபெறும். இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட மலையாளத் திரைப்படமான 'ஜல்லிக்கட்டு' படம் மேற்கண்ட சர்வதேசத் தேர்வில் தேர்வாகவில்லை. இதன் மூலம் இந்தியப் படத்திற்கான விருது வாய்ப்பு கைநழுவிப் போய்விட்டது.
இதுவரை எந்த ஒரு இந்தியப் படமும் ஆஸ்கர் விருதில் சர்வதேச படங்களுக்கான விருதை வென்றதில்லை. கடைசியாக 2001ம் ஆண்டு 'லகான்' படம் டாப் 5 பட்டியலில் இடம் பெற்றது. அதற்கு முன்பாக 1989ம் ஆண்டு 'சலாம் பாம்பே', 1958ம் ஆண்டு 'மதர் இந்தியா' ஆகிய படங்கள் டாப் 5 பட்டியலில் இடம் பெற்றன.