கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா |
கயல் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆனந்தி. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். பரியேறும் பெருமாள் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, என் ஆளோட செருப்ப காணோம், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, விவாரணை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போதும் அலாவுதீனும் அற்புத கேமராவும், டைட்டானிக் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சாக்ரடீஸ் என்ற உதவி டைரக்டரை ஆனந்தி திடீர் திருமணம் செய்து கொண்டார். சாக்ரடீஸ், மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீனின் மைத்துணர். அவரிடம் உதவி டைரக்டராக பணியாற்றி வருகிறார். ஆனந்தி தான் நடித்துள்ள கமலி பிரம் நடுக்காவேரி படத்தின் புரமோசனுக்காக சென்னை வந்திருந்தார். அப்போது திருமணம் செய்து கொண்டது பற்றி கூறியதாவது:
சாக்ரடீஸ் குடும்பமும், எங்கள் குடும்பமும் கடந்த பல வருடங்களாக நெருக்கமான குடும்பம். நாங்கள் நட்பாக பழகினோம். எங்களுக்குள் காதல் எதுவும் இல்லை. எங்கள் குடும்பத்தினர்தான் எங்கள் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்தார்கள். இது காதல் திருமணம் அல்ல. பெற்றவர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம். உரிய வயதில் திருமணம் செய்து கொள்வது எனது தனிப்பட்ட விஷயம். அதனால்தான் அதனை உறவினர்களை வைத்து முடித்துக் கொண்டோம்
திருமணம் செய்து கொண்டதால் சினிமாவில் இருந்து விலக மாட்டேன். தொடர்ந்து நடிப்பேன். என் கைவசம் 4 படங்கள் உள்ளன. தற்போது தெலுங்கு படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகி உள்ளேன். பொதுவாக திருமணத்திற்கு பிறகு அதிக வாய்ப்புகள் வராது என்பார்கள். எனக்கு அதிக வாய்ப்புகள் வருகிறது. என்கிறார் ஆனந்தி.