நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? |
ஓ மை கடவுளே படத்திற்கு பிறகு அசோக் செல்வன் பிசியான நடிகர் ஆகிவிட்டார். மலையாளத்தில் உருவாகி வரும் சரித்திரபடமான மரைக்காயரில் நடித்துள்ளார். இதுதவிர 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் அடுத்து நடிக்கும் படம் தீனி. இதனை அனி ஐ.வி.சசி இயக்குகிறார். அசோக் செல்வனுடன் நித்யாமேனன், ரிது வர்மா நடிக்கிறார்கள். ஸ்ரீ வெங்டேஸ்வரா சினி சித்ரா, ஜீ ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கிறது. திவாகர் மணி ஒளிப்பதிவு செய்கிறார், ராஜேஷ் முருகேசன் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குன் அனி ஐ.வி.சசி கூறியதாவது: இது உணர்வுபூர்வமான காதல் கொண்ட, முழுக்க முழுக்க காமெடி நிறைந்த பொழுதுபோக்கு படம் . அசோக் செல்வன், நித்யா மேனன், ரிது வர்மா நடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்கள் அனைவரையும் வசீகரிக்கும். படப்பிடிப்பு பணிகள் முழுதும் முடிக்கப்பட்டு, போஸ்ட் புரடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. என்றார்.