பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு. எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
படம் குறித்து சிம்பு கூறியிருப்பதாவது: எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. மத நம்பிக்கை இல்லை. எல்லா கடவுளையும் ஒன்றாக பார்க்கிறேன். இந்தச் சமூகத்தில் பொதுவாகவே இஸ்லாமியர்கள் மீது ஒரு பார்வை இருக்கிறது. அதை மாற்றுவதற்கு ஏதாவது ஒன்று பண்ண வேண்டும் என நினைத்துக்கொண்டே இருந்தேன். இந்தப் படத்தில் அந்த விஷயத்தைப் பேசுவதற்குக் கதை சரியாக அமைந்தது. அதற்காகவே இந்தப் படத்தை ஒப்புக்கொண்டேன். வழக்கமான ஒரு கதையாக அல்லாமல், வித்தியாசமாக இருக்கும். என்றார்.
படம் குறித்து இயக்குனர் வெங்கட்பிரபு கூறியிருப்பதாவது: மாநாட்டில் புதிதாக சில விஷயங்களை முயன்றுள்ளேன். ரசிகர்கள் அதைப் படம் பார்க்கும்போது உணர்வார்கள். இதுதான் கதை என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால் காட்சிகளாகப் பார்க்கும்போது உடனே புரிந்துவிடக் கூடிய கதையாக இது இருக்கும்.
ஒரு மாநாட்டை வித்தியாசமான கண்ணோட்டத்தில் காட்டுவதற்கு முயற்சி செய்திருக்கிறேன். வேறமாதிரி ஒரு அரசியலைக் காட்டியிருக்கிறேன். படத்தின் களமே மாநாடுதான். ஒரு மாநாடு நடந்தால் அந்த ஊர் எப்படியிருக்கும், அதற்குள் என்ன நடக்கிறது என்பதுதான் படம் என்கிறார்.