இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்துள்ள டீசர், டிரைலர்களில் ஏதாவது ஒரு டீசராவது ரீவைன்ட் ஷாட்களிலேயே இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான். வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்கும் 'மாநாடு' படத்தின் டீசரை இன்று(பிப்., 3) சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டனர்.
அந்த டீசரின் 1 நிமிடம் 15 வினாடிகளில், 48 வினாடிகள் வரை காட்சிகள் ரீவைன்டில்தான் நகர்கின்றன. அதன்பிறகுதான் நார்மல் ஆக நகர்கின்றன. ஒரு நிமிடத்திலேயே எவ்வளவு பரபரப்பு காட்ட முடியுமோ அந்த அளவிற்கு பரபரப்பைக் காட்டியிருக்கிறார்கள். அதற்கு யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை பக்கபலமாக அமைந்துள்ளது.
டீசரைப் பார்க்கும் போது ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என்பது மட்டும் தெரிகிறது. கேஜிஎப் 2 டீசர் போலவே தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் டைட்டில் கார்டைப் போட்டுவிட்டு ஐந்து மொழிகளில் டீசர் வெளியீடு என பப்ளிசிட்டி செய்கிறார்கள். ஒவ்வொரு மொழியிலிருந்தும் ஐந்து பிரபலங்கள் பட டீசரை வெளியிட்டு மேலும் பப்ளிசிட்டியைக் கொடுத்துவிட்டார்கள்.
டீசர் முழுவதிலும் சிம்புவின் காட்சிகள்தான் அதிகம் உள்ளன. பெயருக்கு கல்யாணி, எஸ்ஜே சூர்யா இருவரும் சில வினாடிகள் வந்து போகிறார்கள்.
இந்தப் படத்தை ஆரம்பிக்காமலேயே, ஒரு காலத்தில் 'டிராப்' செய்துவிடலாம் என ஏன் முடிவெடுத்தார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. விரைவில் ஒரு பரபரப்பான த்ரில்லர் படத்தைப் பார்க்கப் போகிறோம் என்பது மட்டும் புரிகிறது. இந்த டீசரைப் போலவே படத்தையும் இரண்டரை மணி நேரம் பரபரப்பாகக் கொடுக்க வெங்கட் பிரபு முயற்சி செய்வார் என நம்புவோம்.




