சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள 'மாஸ்டர்' படம் தியேட்டர்களில் ஜனவரி 13ம் தேதியும், ஓடிடி தளத்தில் ஜனவரி 29ம் தேதியும் வெளியானது.
தியேட்டர்களில் படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே ஓடிடி தளத்தில் வெளியிட்டதற்கு தியேட்டர்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின் நடந்த பேச்சு வார்த்தையில் சுமூகமான உடன்பாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இருப்பினும் தியேட்டர்களில் 'மாஸ்டர்' படம் இன்னமும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. நேற்றும், நேற்று முன்தினமும் விடுமுறை தினம் என்பதால் பல ஊர்களில் பல தியேட்டர்களில் படத்திற்கு நல்ல கூட்டம் வந்துள்ளது.
சிங்கிள் ஸ்கிரீன்கள் பலவற்றில் இந்த வாரமும் படத்தைத் தொடர முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் பல மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அடுத்த சில நாட்களில் படத்தை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளார்களாம்.
இன்று முதல் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஓடிடி தளத்தில் அடுத்த வாரம் வெளியிட்டிருந்தால் இந்த மூன்றாவது வாரத்தில் நல்ல வசூலைப் பெற்றிருக்கலாம் என தியேட்டர்காரர்கள் கருதுகிறார்கள். மூன்றாவது வாரத்தில் தான் தியேட்டர்காரர்களுக்கு பங்குத் தொகை அதிகம் வரும்.
வெளிநாட்டிற்கு படத்தை வாங்கிய வினியோகஸ்தரும், இங்குள்ள சில வினியோகஸ்தர்களும் உண்மையான கணக்கைக் காட்டாத காரணத்தால் தான் தயாரிப்பாளர் ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட்டதாகத் தெரிவிக்கிறார்கள். இத்தனைக்கும் வெளிநாட்டு உரிமைக்காக வாங்கிய பணத்தில் பல கோடி ரூபாயை தயாரிப்பாளர் திருப்பிக் கொடுத்து விட்டாராம். உண்மையான வசூலைக் காட்டியிருந்தால் அவர் ஓடிடியில் வெளியிட்டிருக்க மாட்டார் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
விஜய் படத்திற்கே இப்படி ஒரு நிலைமை என்றால் மற்ற படங்களின் நிலைமையை யோசித்துப் பாருங்கள் என்கிறார் தயாரிப்பாளர் ஒருவர்.