அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், சைப் அலிகான், கிரித்தி சனோன் மற்றும் பலர் நடிக்க, பிரம்மாண்டமாக உருவாக உள்ள படம் 'ஆதி புருஷ்'. ராமாயணக் கதையாக உருவாக உள்ள இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ், சீதை கதாபாத்திரத்தில் கிரித்தி சனோன், ராவணன் கதாபாத்திரத்தில் சைப் அலிகான் நடிக்க உள்ளனர்.
படத்தில் உள்ள மற்றொரு முக்கிய கதாபாத்திரமான ராமர் அம்மா கவுசல்யா கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை ஹேமமாலினியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹேமமாலினி, ஹிந்தித் திரையுலகில் ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக விளங்கியவர். இதற்கு முன்பு தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த 'கவுதமிபுத்ர சட்டகர்னி' படத்தில் கவுதமி பாலஸ்ரீ ஆக நடித்தார்.
தற்போது மீண்டும் ஒரு சரித்திரப் படத்தின் மூலம் தெலுங்கில் நடிக்க வருகிறார். விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.