நடிகை ராதிகா நேரடி அரசியலில் இல்லாவிட்டாலும் அரசியல் கட்சியோடு தொடர்பில் இருக்கிறவர். தி.மு.க தலைவர் கருணாநிதியின் குடும்பத்திற்கு நெருக்கமான ராதிகா, தி.மு.கவுக்காக தேர்தல் பிரச்சாரமும் செய்திருக்கிறார்.
சரத்குமாரை திருமணம் செய்து கொண்ட பிறகு அவரது கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு மகளிர் அணி பொறுப்பாளராகவும் இருக்கிறார். கடந்த தேர்தலில் கணவர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்காக பிரச்சாரம் செய்தார். இந்த நிலையில் வருகிற சட்டசபை தேர்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ராதிகா தேர்தலில் போட்டியிடவார் என்று சரத்குமார் அறிவித்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் நடந்த கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பின்னர் நிருபர்களிடம் பேசும்போது "அதிமுகவின் மூத்த உறுப்பினர் நான். எனவே எம்.ஜி.ஆர் மீது எனக்கு எல்லா உரிமையும் உண்டு. நாங்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளை பெறாமல் கூடுதல் தொகுதிகளை பெறுவோம். சட்டசபை தேர்தலில் கட்சியின் மகளிர் அணி செயலாளர் ராதிகா போட்டியிடுவார். என்றார்.