மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
கொரோனாவால் கடந்தாண்டு வெளியாக வேண்டிய பல படங்கள் இந்தாண்டு வரிசைக்கட்டி நிற்கின்றன. இதனால் ரிலீஸில் பல குழப்பங்கள் நிலவி வருகின்றன. பாகுபலி படங்களுக்கு பின் ராஜமவுலி இயக்கத்தில் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் 'ஆர்.ஆர்.ஆர்'. ராம் சரண், ஜுனியர் என்டிஆர், ஆலியாபட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படம் சுதந்திர போராட்ட கதையில் உருவாகி வருகிறது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
சில தினங்களுக்கு இப்படம் அக்., 13ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இது ஹிந்தி தயாரிப்பாளர் போனி கபூரை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது. காரணம் அவரது தயாரிப்பில் அஜய் தேவ்கன் நாயகனாக நடித்துள்ள 'மைதான்' படம் அக்., 15ல் வெளியாவதாக முன்பே அறிவிக்கப்பட்டது.
இதுபற்றி போனி கபூர், ''கொரோனா காலத்தில் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்க வேண்டும். ஆனால் திரையுலகில் அப்படி இல்லை. இரண்டு பெரிய படங்கள் ஓரிரு நாள் இடைவெளியில் வருவது விரும்பத்தகாத நிகழ்வு. இரண்டு படத்திற்கும் தேவையில்லாத குழப்பங்களும் வரும், தியேட்டர் உள்ளிட்ட பிரச்னைகளும் வரும். இதனால் வினியோகஸ்தர்களும் பாதிக்கப்படுவார்கள். ராஜமவுலியிடம் பேசியபோது, தயாரிப்பாளர் தான் ரிலீஸ் தேதி முடிவு செய்கிறார், என்றார்' என குறிப்பிட்டுள்ளார்.