'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பலர் பணத்தை இழப்பதும் சிலர் தற்கொலை செய்து கொள்வதும் வாடிக்கையாகி விட்டது. திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பலர் இந்த ஆன்லைன் ரம்மியை விளம்பரப்படுத்துகின்றனர். சமீபத்தில் மதுரையை சேர்ந்த ஒருவர், சூதாட்ட விளையாட்டுக்களை தடைசெய்ய வேண்டும் என்று மனு செய்திருந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த விளையாட்டை விளம்பரப்படுத்தி வரும் நடிகர்கள் தமன்னா, பிரகாஷ்ராஜ், சுதீப், கிரிகெட் வீரர் விராட் கோலி உள்ளிட்ட பிரபலங்களுக்கும் மத்திய மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
இந்தநிலையில் சமீபத்தில் கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் 27 லட்ச ரூபாயை இழந்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து கேரள நீதிமன்றத்தில், ஒருவர் இதுகுறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தமன்னா, பிரபல மலையாள காமெடி நடிகர் அஜு வர்கீஸ் மற்றும் கேரள அரசு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.




