மறக்க முடியுமா? - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் | 'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல் | ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை? | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா? | சொந்த 'கேரவன்' வாங்கிய மகேஷ் பாபு | தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' | தெலுங்கில் ரீமேக் ஆகும் களத்தில் சந்திப்போம் |
தமிழில் இருந்து சென்ற நடன இயக்குனர்கள், ஸ்டண்ட் மாஸ்டர்கள் எல்லோரும் மலையாள திரைப்படங்களில் கோலோச்சி வரும் நிலையில், தமிழ் இசையமைப்பாளர்களின்(ஒரு சிலரை தவிர) கவனம் மட்டும் மலையாள திரையுலகம் பக்கம் திரும்பவே இல்லை. இந்தநிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தற்போது, முதன்முதலாக 'அன்வேஷிப்பின் கண்டெத்தும்' (விசாரித்தால் கண்டறியலாம்) என்கிற மலையாள படத்திற்கு இசையமைப்பதன் மூலம் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.
இளம் முன்னணி நடிகராக வளர்ந்து வருகின்ற, தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமான நடிகர் டொவினோ தாமஸ் தான் இந்தப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த கதையின் தன்மைக்கு சந்தோஷ் நாராயணன் போன்ற ஒருவர் இசையமைத்தால் தான் பொருத்தமாக இருக்கும் என இந்தப்படத்தின் அறிமுக இயக்குனர் டார்வின் குரியாகோஷ், விரும்பியே அவரை தேர்வு செய்துள்ளாராம்..