இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
பாபி சிம்ஹா தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று தான் 'வசந்தமுல்லை'. ரமணன் புருஷோத்தமா என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.. ராம் தல்லூரி என்கிற நிறுவனத்துடன் பாபி சிம்ஹாவின் மனைவி நடிகை ரேஷ்மி மேனனும் இணைந்து இந்தப்படத்தை தயாரித்து வருகிறார். இந்தப்படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்..
இவர் தான் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான பிரேமம் படத்திற்கு இசையமைத்தவர். அதுமட்டுமல்ல, அதற்கு முன்னதாக தமிழிலும் மலையாளத்திலும் வெளியான நேரம் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.. நேரம் படத்தில் பாபி சிம்ஹாவும் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த நட்பின் அடிப்படையில் தான், தனது சொந்த படத்திற்கு ராஜேஷ் முருகேசனை இசையமைக்க வைத்துள்ளார் பாபி சிம்ஹா. இந்தப்படத்தில் ருத்ரா என்கிற கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடிக்கிறார். அதை முன்னிட்டு நாளை (ஜன-26ஆம் தேதி) 'ரேஜ் ஆப் ருத்ரா' என்கிற பெயரில் டீசர் ஒன்றை வெளியிட இருக்கிறார்கள்.