ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! |
திருமணத்திற்கு பிறகும் வழக்கம்போல் படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். அதேசமயம் நயன்தாரா, சமந்தாவை ஆர்வமுடன் படங்களுக்கு புக் பண்ணும் தயாரிப்பாளர்கள் தன்னை புக் பண்ணுவதில்லை என்கிற ஒரு ஆதங்கம் அவரிடம் இருந்து வருகிறது.
இருப்பினும் தான் நடித்து வரும் இந்தியன்-2, ஆச்சார்யா ஆகிய படங்கள் திரைக்கு வரும்போது நானும் தயாரிப்பாளர்களின் நம்பிக்கைக்குரிய நடிகையாகி விடுவேன் என்று நம்பும் காஜல், தான் நடித்து வந்த மொசகலு என்ற தெலுங்கு படம் திரைக்கு வர தயாராகி விட்டதால் கூடுதல் உற்சாகமடைந்திருக்கிறார்.
ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஜெப்ரிசின் இயக்கியுள்ள இந்த படத்தில் விஷ்ணு மஞ்சு, ருஹானி சர்மா, பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி ஆகியோருடன் இணைந்து காஜல் அகர்வாலும் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக இருப்பதோடு மார்ச் 11-ல் இப்படம் திரைக்கு வருகிறது. ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள மொசகலு, தனது சினிமா பயணத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நம்பிக்கையுடன் உள்ளார் காஜல்.