படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவகன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு ராஜமவுலி இயக்கி வரும் இப்படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படத்தின் வெளியீடுதான் இந்தியத் திரையுலகில் இந்த ஆண்டின் மிகப் பெரிய வெளியீடு என கருதப்படுகிறது.
படத்தை தக்க நேரத்தில் வெளியிட வேண்டும் என தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனராம். அக்டோபர் மாதம் 8ம் தேதி இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அயர்லாந்து நடிகையான அலிசன் டூடி அவரது இன்ஸ்டா பக்கத்தில் படத்தின் வெளியீட்டுத் தேதியைக் குறிப்பிட்டு, பின்னர் அந்தப் பதிவை நீக்கிவிட்டார். அவருடைய பதிவு மூலமாக அதுதான் வெளியிட்டுத் தேதி என தெரிய வந்துள்ளது.
'கேஜிஎப் 2' டீசர் பெரும் சாதனையைப் படைத்துள்ள நிலையில் தெலுங்கு ரசிகர்கள் 'ஆர்ஆர்ஆர்' டீசரை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.