'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
இந்தியத் திரையுலகில் ஒரு கன்னடப் படம் பரபரப்பாகப் பேசப்பட்டது ஒரு வரலாறு தான். அப்படி ஒரு வரலாற்றைப் பெற்ற படமாக 'கேஜிஎப் சேப்டர் 2' படம் இடம் பெற்றுள்ளது.
அப்படத்தின் டீசர் வெளிவந்து தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து இதுவரையில் வெளிவந்த டீசர்களின் சாதனைகளை முறியடித்து நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது.
ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மொழிப் படங்கள் செய்யாத ஒரு சாதனையை கன்னடப் பட டீசர் செய்து இந்தியத் திரையுலகத்தையே வியக்க வைத்துள்ளது.
'கேஜிஎப்' முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து இரண்டாம் பாகத்திற்காக தனது சம்பளத்தை புது கணக்கில் ஒப்பந்தம் செய்துள்ளாராம் படத்தின் நாயகன் யாஷ்.
முதல் பாகத்திற்காக அவருக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாம். இரண்டாம் பாகத்திற்காக அவருடைய சம்பளம் டபுள் ஆகி 30 கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டதாம். மேலும், படத்தின் லாபத்தில் குறிப்பிடத்தக்க சதவீதத்தையும் பேசியுள்ளாராம்.
இம்மாதிரியான சம்பள விகிதம் ஹிந்திப் பட நடிகர்கள் மட்டுமே போடுவார்கள். அவர்களைப் போலவே தற்போது கன்னட நடிகரான யாஷ் போட்டிருக்கிறார் என சாண்டல்வுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த கணக்கின்படி படம் வெளிவந்தால் எப்படியும் யாஷ் சம்பளமாக 100 கோடி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.