தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் படமான ஸ்ரீதரின் முதல் கதை | காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு... | கென்யா ட்ரிப்பில் மொபைல் போனை பறிகொடுத்த பிரயாகா மார்ட்டின் |
ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் நடித்து, 2015ல் வெளியாகி, வெற்றி பெற்ற படம் 'இன்று நேற்று நாளை'. இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என ஏற்கனவே அறிவித்த தயாரிப்பாளர் சிவி.குமார், நேற்று படத்தை துவக்கினார். ஏற்கனவே நடித்த நடிகர்களுடன், இன்னும் புதியவர்கள் சிலர் இரண்டாம் பாகத்தில் இணைகின்றனர். ரவிக்குமாரின், கதை, திரைக்கதையை வைத்து அவரிடம் உதவியாளராக இருந்த கார்த்திக் பொன்ராஜ் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஜிப்ரான் இசை. இது சிவி.குமாரின் 25வது படமாகும்.