25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் | நடிகர் பாலாவின் மனைவிக்கு லாட்டரியில் 25 ஆயிரம் பரிசு | 96 வயது ரசிகரின் விருப்பத்தை நிறைவேற்றிய மோகன்லால் | 151-வது படத்தில் சகோதர நடிகர்களுடன் கைகோர்த்த நடிகர் திலீப் | தெலுங்கானாவில் ஸ்டுடியோ அமைக்க அஜய் தேவ்கன் ஆர்வம் | 40 வயது ரன்வீர் சிங் ஜோடி 20 வயது சாரா : ரசிகர்கள் கமெண்ட்ஸ் | இந்த வாரம் 5 படங்கள் ரிலீஸ் | அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” |
தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு விளையாட்டு தற்போது நடந்து வருகிறது. இந்த விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் தங்க காசு பரிசு வழங்குகிறார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது களத்தில் நின்ற நடிகர், நடிகைகள் யாரும் இப்போது ஜல்லிக்கட்டை கண்டு கொள்ளவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முன்னணியில் இருந்த நடிகர் ராகவா லாரன்ஸ் ஜல்லிகட்டு வீரர்களுக்கு தங்ககாசு அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழனின் வீர அடையாளமான ஜல்லிக்கட்டு காட்சிகளை பார்க்கும்பொழுது ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் ஜல்லிக்கட்டுக்காக உணர்வு ரீதியாக போராடியதையும், பல அரசியல் தலைவர்கள் சட்ட ரீதியாக போராடி வெற்றி பெற்றதையும், இந்த மாபெரும் நிகழ்வில் என்னுடைய சிறு பங்கு இருந்ததையும் நினைத்து பார்க்கிறேன்.
போராட்டத்தின் போது ரயில் மீது ஏறி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சேலத்தை சேர்ந்த யோகேஸ்வரன் குடும்பத்தின் ஒரு மகன் என்ற நிலையில் இருந்து ஒரு நிலம் வாங்கி வீடு கட்டி தந்துள்ளேன். அதோடு இல்லாமல் யோகேஸ்வரனை என்றளவும் நினைவு கூறும் விதமாக இப்பொழுது ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் இனிவரும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கும் ஒவ்வொரு வருடமும் அவன் பெயர் பொறித்த தங்க காசுகளை பரிசாக வழங்க முடிவு செய்துள்ளேன் என்றார்.