அண்ணன் சூர்யாவிற்கு வழிவிடும் தம்பி கார்த்தி | ஜி.வி.பிரகாஷ், கயாடு லோகர் நடிக்கும் இம்மார்டல் | பாடகி கெனிஷா உடன் ஜோடியாக வந்த ரவி மோகன் : தந்தை என்பது பெயர் அல்ல பொறுப்பு என ஆர்த்தி ரவி காட்டம் | டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | மீண்டும் போதையில் கலாட்டா ; ஜெயிலர் வில்லன் கைதாகி ஜாமினில் விடுதலை | காந்தாரா படப்பிடிப்பில் விபத்து நடக்கவில்லை ; தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் | 'மாமன்' பட இசையமைப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட சூரி | அல்லு அர்ஜுனின் தோற்றத்தில் இருப்பவருக்கு ஜாக்பாட் ; விளம்பரத்தில் நடிக்க 12 லட்சம் சம்பளம் | 50 வருட அனுபவம் கொண்ட தேசிய விருது ஒளிப்பதிவாளர் டைரக்சனில் நடிக்கும் யோகிபாபு | கரையான் அரித்த ஒரு லட்சம்: ஏழைப் பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், ரம்யா உள்ளிட்ட பலர் நடித்து, ஜன., 13ல் திரைக்கு வந்துள்ள படம் மாஸ்டர். இரண்டு விதமாக இருந்தாலும் வசூலை வாரிக் குவிக்கிறது மாஸ்டர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டுமின்றி முதன்முறையாக விஜய்யின் படம் ஹிந்தியிலும் டப்பாகி ரிலீஸாகி உள்ளது.
இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக் உரிமத்தை எண்டெமால் சைன் இந்தியா நிறுவனம் பெரும் தொகை கொடுத்து பெற்றுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அபிஷேக் ரெகோ கூறியிருப்பதாவது: மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியதில் எங்களுக்குப் பெருமை. தமிழில் இந்தப் படம் உருவாக்கிய மாயாஜாலத்தை இந்தி ரசிகர்களை ஈர்க்குமாறு நாங்கள் மீண்டும் உருவாக்குவதை ஆர்வத்துடன் எதிர் நோக்கியிருக்கிறோம் என்றார்.
தியேட்டரில் படம் பார்த்த விஜய்
இதனிடையே மாஸ்டர் படத்தை சென்னை தேவி தியேட்டரில் படம் வெளியான அன்றே முதல் காட்சியை விஜய் பார்த்துள்ளார். இதுதொடர்பான சிசிடி காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் அடையாளம் கண்டுகொள்ளாதபடி தொப்பி மற்றும் மாஸ்க் அணிந்து கொண்டு, புரொஜெக்டர் ரூம் அருகில் உள்ள பால்கனியில் இருந்து மாஸ்டர் படத்தையும், ரசிகர்களின் ஆரவாரத்தையும் கண்டு விஜய் ரசித்துள்ளார். விஜய் தியேட்டருக்குள் நுழைவதும், தியேட்டர் மானேஜர் வரவேற்புதுமான வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.