குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
பிரசாந்த் நீல் மற்றும் பிரபாஸ் இணையும் சலார் திரைப்படம் வரும் நாளை (ஜனவரி 15) பூஜையுடன் தொடங்குகிறது. இப்படத்தில் பிரபாஸ், ரசிகர்கள் இதற்கு முன் பார்த்திராத ஒரு வன்முறையான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். சலார் படக்குழுவினர் கலந்து கொள்ளும் படப்பூஜை ஐதராபாத்தில் நடைபெறுகிறது. இதில் கர்நாடக துணை முதல்வர், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, நடிகர் யாஷ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
இது குறித்து பிரபாஸ் கூறுகையில், "ஐதராபாத்தில் படப் பூஜையைத் தொடர்ந்து படப்பிடிப்பைத் தொடங்கவும், ரசிகர்களுக்கு என்னுடைய தோற்றத்தை வெளிப்படுத்தவும் நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன்" என்கிறார்.