இரண்டு வாரத்தில் எனிமி டீசர் | ஒரேநாளில் இசைக்கோர்ப்பை முடித்த இளையராஜா | மண்டேலா படம் பார்த்து யோகி பாபுவை பாராட்டிய கிரிக்கெட் வீரர் | பாகுபலியை ஆர்ஆர்ஆர் மறக்கடித்து விடும் : லண்டன் தணிக்கை குழு உறுப்பினர் பிரமிப்பு | ரஜினி அரசியலுக்கு வராதது வருத்தமே - கே.எஸ்.ரவிக்குமார் | என்னை திட்டாதீங்க...! - டுவிட்டரில் கெஞ்சிய நட்டி நடராஜ்! | ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போன சிரஞ்சீவி படம் | வலிமைக்காக பஸ் ஒட்டிய அஜித் | புதையலை தேடி அலையும் யோகிபாபு | படப்பிடிப்பில் ‛அண்ணாத்த' ரஜினி : போட்டோ வைரல் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் மாஸ்டர். அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய படம், கொரோனா பிரச்னையால் முடங்கியது. பல முறை ஓடிடியில் வெளியிட நிறைய ஆபர்கள் வந்தும், படத்தை தியேட்டரில் மட்டும் தான் வெளியிடுவேன் என விஜய் மற்றும் பட தயாரிப்பு நிறுவனம் உறுதியாக இருந்தது.
அதன்படி மாஸ்டர் படம் பொங்கல் வெளியீடாக இன்று(ஜன., 13) திரைக்கு வந்துள்ளது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் முதன்முறையாக ஹிந்தி மொழியிலும் விஜய் படம் வெளியாகிறது. 50 சதவீதம் இருக்கைகள் மட்டுமே அனுமதி என்ற சூழழில் மாஸ்டர் படம் வெளியாகி உள்ளது. அதேசமயம் தொடர் விடுமுறை என்பதால் அனைத்து காட்சிகளும், அனைத்து ஊர்களிலும் நன்றாகவே முன்பதிவு ஆகி உள்ளது. இதனால் தியேட்டர் உரிமையாளர்களும் மாஸ்டர் படத்தை பெரிதும் நம்பி உள்ளனர்.
அதற்கு ஏற்றபடி படத்தின் ரிசல்ட்டும் ஓரளவுக்கு பாசிட்டிவ்வாகவே வந்துள்ளது. விஜய் ரசிகர்கள் ரசிக்கும் விதமாக மாஸ் காட்சிகளுடன் படம் இருப்பதால் ரசிகர்களும் முதல் நாள் முதல் காட்சியை கொண்டாடி வருகின்றனர். ஓராண்டு இடைவெளிக்கு பின் விஜய் படம் வெளியாவதால் ரசிகர்கள் மாஸ்டரை கொண்டாடுகின்றனர்.