'த காலர்' பிரிட்டிஷ் படத்தின் காப்பியா 'ஹவுஸ்மேட்ஸ்'? | 'ஐமேக்ஸ்' ரிலீஸ் இல்லாத 'கூலி': ரசிகர்கள் வருத்தம் | குழந்தைகளும் பார்க்கும் வகையிலான பேய்கதை | அரசியலில் இருந்து விலகிய பிறகும் விமர்சிக்கிறார்கள்: சிரஞ்சீவி பேச்சு | மதுரை மாநாடு நடப்பதென்ன... நடிகர், நடிகைகள் இணைகிறார்களா? | மூத்த நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் |
மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி நடித்து வெளிவந்த 'சார்லி' படம் தமிழில் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க 'மாறா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. கடந்த வாரம் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.
மாதவன் நடித்து இதற்கு முன்பு தமிழில் வெளியான 'சைலன்ஸ்' படமும் ஓடிடியில்தான் வெளியானது. அப்படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. மாறாக 'மாறா' படத்திற்கு இரு விதமான வரவேற்பு கிடைத்து வருகிறது. திரையுலகத்தைச் சேர்ந்த மாதவனின் நண்பர்கள் படத்தைப் பாராட்டித் தள்ளுகின்றனர்.
சராசரி சினிமா பார்க்கும் ரசிகர்கள் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை, மலையாள ரீமேக்கான 'சார்லி' படம் போலக் கூட இல்லை என்ற கருத்தை சமூக வலைத்தளங்களில் முன்வைக்கின்றனர். அப்படி ஒரு ரசிகர் மாதவனையும் டேக் செய்து, “சார்லி' படத்தைப் பார்த்த ரசிகர்களுக்கு இப்படம் சீரியசாகவே சராசரிக்கும் கீழான ஒரு படம்தான். முதல் 30 நிமிடங்களுக்குப் பிறகு படத்தைப் பார்ப்பது வலியாக உள்ளது. இப்படத்தைக் கெடுத்ததே சீரியசாக மாதவன் தான். வருத்தமான, சோர்வான ஒரு கதாபாத்திரம்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அந்த ரசிகருக்கு, “உங்களை ஏமாற்றமடைய வைத்ததற்கு மன்னிக்க சகோதரா. அடுத்த முறை சிறப்பாகச் செய்ய முயற்சிக்கிறேன்,” என மிகப் பணிவாக பதிலளித்துள்ளார். மாதவனின் இந்த பதிலுக்கு ஆயிரக்கணக்கானோர் 'லைக்' தெரிவித்துள்ளனர்.