துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படம், பொங்கல் விருந்தாக ஜன., 13ல் ரிலீஸாகிறது. தியேட்டர்களில் 50 சதவீதம் இருக்கைகளுடன் படம் வெளியாக உள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்கணும் என்பது விதிமுறை.
இந்நிலையில் படத்திற்கான முன்பதிவு துவங்கி உள்ளது. சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் டிக்கெட் முன்பதிவு செய்ய ரசிகர்கள் முண்டியடித்தனர். மன்னன் படத்தில் ரஜினி - கவுண்டமணி தியேட்டரில் டிக்கெட் வாங்குவார்களே.... அதுபோன்று சில ரசிகர்கள் கூட்டமாக டிக்கெட் கவுன்டர் மேல் ஏறி நின்ற போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின. கொரோனா பிரச்னை இன்னும் முழுமையாக தீராத போது ரசிகர்கள் இது போன்று கூட்டமாக கூடியதும், சமூக இடைவெளியை பின்பற்றாமல், மாஸ்க் கூட அணியாமல் இவர்கள் இது போன்ற செயல்களை செய்வதை என்னவென்று சொல்வது என பலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.