'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
2002-ல் ஆல்பம் படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் வசந்த பாலன். அப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத போதும், அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய வெயில், அங்காடித்தெரு, காவியத் தலைவன் போன்ற படங்கள் வசந்தபாலனுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.
தற்போது ஜி.வி.பிரகாஷ், அபர்னதி நடித்துள்ள ஜெயில் படத்தை இயக்கியுள்ளார் வசந்தபாலன். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
ஜெயில் படத்தைத் தொடர்ந்து அவர் அர்ஜுன் தாஸை வைத்து புதிய படம் இயக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. அப்படம் பாலிவுட்டில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான தி லிப்ட் பாய் என்கிற படத்தின் தமிழ் ரீமேக் என்றும் கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை என வசந்தபாலன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "பல முக்கியமான இணையதளங்களில், நான் இந்தியில் வெளியான 'தி லிப்ட் பாய்' திரைப்படத்தை ரீமேக் செய்யப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது. அது முற்றிலும் தவறான தகவல்" எனத் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் ரீமேக் தகவலை மட்டும் மறுத்துள்ள வசந்தபாலன், அர்ஜுன் தாஸ் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இதனால் வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி இருப்பதாக நம்பப்படுகிறது.