குட் பேட் அக்லி படத்திற்காக அனிருத் பாடிய முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | பாரபட்சம் காட்டுவது வருத்தமாக உள்ளது : ஜோதிகா | ரீ-ரிலீஸ் ஆகும் தனுஷின் பொல்லாதவன் | சிம்பு 51வது பட அப்டேட் தந்த அஷ்வத் மாரிமுத்து | 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் எப்போது? | தனுஷ் 55வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? | இறுதிக்கட்டத்தில் ‛7ஜி ரெயின்போ காலனி 2' | பாலா செய்த அதே தவறைச் செய்கிறாரா வெற்றிமாறன்? | பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டுமே பணியாற்றியுள்ள முதல் மலையாள படம் 'மும்தா' | ஸ்வீட் ஹார்ட் : விஜய்யை புகழும் வில்லன் பாபி தியோல் |
நடிகரும், நடன இயக்குனருமான கோகுல், 'கோகுல்நாத் யூனிக் டேலண்ட் அகாடமி' என்ற பயிற்சி மையம் மூலம், ஒரே நேரத்தில், 15 கின்னஸ் சாதனைகள் படைத்துள்ளார். அவருக்கு இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர், நேரில் வந்து வாழ்த்து கூறியுள்ளனர்.இது குறித்து, கோகுல் நாத் கூறியதாவது: கோகுல்நாத் யூனிக் டேலண்ட் மையத்தில், 60 மாணவ - மாணவியர் பயிற்சி பெற்று வருகின்றனர். இடுப்பு, கை, கால் உள்ளிட்ட பகுதியில் வளையத்தை சுற்றுவது, குட்டா எனப்படும்.இதில், உலகளவில் நிகழ்த்தப்பட்ட, 'கின்னஸ்' சாதனையை நாங்கள் முறியடித்துள்ளோம். 2 கிலோ இரும்பு வளையத்தை, நாகராஜ், ஒரு நிமிடத்தில் 144 முறை வயிற்றில் இடைவிடாமல் சுற்றியுள்ளார். இதை ஹூலா ஹூப் என்பர்.இதற்கு முன், 142 முறை சுற்றியதே அதிகமாக இருந்தது. ஜெசிகா என்ற மாணவி தலைகீழாக நின்றபடி, ஒரு கால் பாதத்தில், வளையத்தை ஒரு நிமிடத்திற்கு இடைவிடாமல், 213 முறை சுற்றியுள்ளார். இதனுடன், என்னுடைய நான்கு சாதனைகள் உட்பட, 15 கின்னஸ் சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.பொதுவாக நாம், ஒரு மூளையை மட்டுமே, அதிகம் பயன்படுத்துவோம். இப்பயிற்சிகளின் மூலம், நம் இரண்டு மூளையும் சுறுசுறுப்பாகும். மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனவளர்ச்சி குன்றியோருக்கு இப்பயிற்சி பெரிதும் உதவியாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.