ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
குஜராத்தி பொண்ணு பூஜா ஜவேரி. பாம் போலேநாத் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு பல தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்தார். தமிழில் தொடரி படத்தில் 2வது ஹீரோயினாக நடித்தார். தற்போது அதர்வாவுடன் ருக்குமணி வண்டி வருது என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக துவாரகா என்ற படத்தில் நடித்தார்.
5 வருடத்திற்கு முன்பு சினிமாவில் அறிமுகமானாலும் சரியான அங்கீகாரம் பூஜாவுக்கு கிடைக்கவில்லை. தற்போது தமிழில் 8 என்ற படத்தில் நடித்து வரும் அவர், ஸ்ரீகாந்த் நடிக்கும் எக்கோ படத்தில் இணைந்திருக்கிறார். இந்தப் படத்தில் வித்யா பிரதீப் ஒரு நாயகியாக நடித்து வருகிறார். மற்றொரு நாயகியாக பூஜா இணைந்திருக்கிறார்.
இப்படத்தை இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர்.ராஜசேகர், ஹாரூன் ஆகியோர் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் நவீன் கணேஷ் இயக்குகிறார். கடந்த அக்டோபரில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது பூஜா ஜாவேரி, ஸ்ரீகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஜான் பீட்டர் இசையமைக்கிறார்.