அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! |
எதையும் புதுமையாக செய்கிறவர் பார்த்திபன், இயக்குனர், நடிகர், பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர் என பன்முகம் கொண்டவர். அவர் 2021ம் ஆண்டுக்கான டிஜிட்டல் காலண்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த காலண்டரில் 12 மாதத்திற்கும் ஏற்ற மாதிரி போஸ் கொடுத்துள்ளார். கவிதையும் எழுதி உள்ளார். அந்த கவிதைளில் சில சாம்பிள்கள் வருமாறு:
ஜனவரி
ஜனங்களின் வரி
பணத்தில் வறுமை கோட்டை அழிப்பதே
ஓட்டுக்காகத் தரும்& பெரும் லஞ்சமாகும்.
பிப்ரவரி
பிப்-வரிந்து கட்டிக்கொண்டு பிறர்க்கு நல்லதும்
ஆருயிர் தோழனான நம் ஆரோக்கியம் காக்க
உடற், மூச்சு பயிற்சியும் செய்வோம்க்ஷ
என் ஜாண் உடம்மை மீறி என்ன
என்ஜாய்ன்மெண்ட்?
மார்ச்
மாச்சர்யம் இல்லா மனம் பூச்சொரியும்
ஏப்ரல்
முட்டாள் என்பதை
முட்டாத-ஆள் என்றும் பொருள் காணலாம்
பொருள் காண, புகழ்காண
வாய்ப்பிற்காக வாசற் கதவை
சுயமரியதை இழந்து
முட்டாத ஆள்.
இப்படியாக 12 மாதங்களுக்கும் கவிதை எழுதியுள்ளார் பார்த்திபன்.