அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! |
விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் 'மாஸ்டர்' படம் ஜனவரி 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. கடந்த ஒன்பது மாதங்களாக கொரோனா தொற்று காரணமாக பெரிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
'மாஸ்டர்' படம் தான் சுமார் பத்து மாத இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் முதல் பெரிய திரைப்படமாக அமைய போகிறது. இப்படத்தை உலகம் முழுவதும் பல தியேட்டர்களில் வெளியிட முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.
வெளிநாடுகளில் அமெரிக்கா தான் ஒரு பெரிய எதிர்பார்ப்பை எப்போதும் ஏற்படுத்தும். அங்கு இதுவரையில் சுமார் 100 தியேட்டர்கள் வரையில் 'மாஸ்டர்' படத்தை வெளியிட உறுதி செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அந்த எண்ணிக்கை அதிகமாகி அதிகாரப்பூர்வப் பட்டியல் வெளியாகலாம்.
இதனிடையே, ஆஸ்திரேலியாவில் சுமார் 70 தியேட்டர்கள் வரையில் இப்படத்தை வெளியிட உறுதி செய்து பட்டியலையும் வெளியிட்டுள்ளார்கள். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லேன்ட், விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மானியா ஆகிய அனைத்து மாநிலங்களிலும் 'மாஸ்டர்' வெளியாகிறது. தியேட்டர்களின் எண்ணிக்கை இன்னும் கூடவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.