ஹாலிவுட் நடிகை புற்றுநோய்க்கு பலி | தமிழுக்கு ஹீரோவாக வரும் தெலுங்கு காமெடி நடிகர் | விமரிசையாக நடந்த பூர்ணாவின் வளைகாப்பு | படித்த கல்லூரிக்கு விசிட் அடித்த மம்முட்டி | சாஹோ டைரக்டருடன் கைகோர்த்த பவன் கல்யாண் | மோகன்லால் பட வாய்ப்பை ஒதுக்கிய ரிஷப் ஷெட்டி | விருது வழங்கும் விழாவில் மீண்டும் சந்தித்துக்கொண்ட சூபியும் சுஜாதையும் | சத்தம் இல்லாமல் பாலிவுட் படத்தில் நடித்து முடித்த ஜோதிகா | அசீமிற்கு விருந்து கொடுத்த வனிதா | என் மீது பொய்வழக்கு : நித்யா பேட்டி |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரது முதல் படைப்பாக வெளியாகிய மாநகரம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப்படம் கொடுத்த வெற்றியின் மூலம், கார்த்தி, விஜய், கமல் என முன்னணி நடிகர்களை வைத்து இயக்கும் அளவுக்கு உயர்ந்தார் லோகேஷ் கனகராஜ். இந்தநிலையில் இந்தப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்தியில் இதற்கு 'மும்பைகார்' என டைட்டில் வைத்துள்ளனர். பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இந்தப்படத்தை இயக்குகிறார். ஷிபு தமீன்ஸ் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.
இந்தப்படத்தின் நான்கு மைய கதாபாத்திரங்களில் ஒருவராக விஜய்சேதுபதி நடிக்கிறார்.. இந்த தகவலை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அவரே பகிர்ந்து கொண்டுள்ளார். மற்ற கதாபாத்திரங்களில் விக்ராந்த் மாசே, தன்யா மாணிக்தலா, ரன்வீர் ஷோரே, சஞ்சய் மிஸ்ரா, சச்சின் கெடேகர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏற்கனவே அமீர்கானின் லால்சிங் சத்தா படத்தில் நடிப்பதாக இருந்து அதன்பின் அந்தப்படத்தில் இருந்து விலகிய விஜய்சேதுபதிக்கு இந்தியில் இதுதான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது...