சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பிரகாஷ்ராஜ் இயக்கிய டோனி படத்தின் மூலம் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. வங்கமொழி நடிகை. தற்போது வெற்றிச்செல்வன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அவர் லண்டனைச் சேர்ந்த இசை அமைப்பாளர் ஒருவரை காதலிப்பதாகவும், அவருடன் சேர்ந்து சுற்றுவதாகவும் கூறப்படுகிறது. வெற்றிச் செல்வன் படப்பிடிப்புக்காக வந்திருந்த அவரைப்பிடித்து இதுபற்றி கேட்டதும் சிரித்துக் கொண்டே அவர் சொன்னது "என் காதல் கல்யாணம் பற்றி எப்படித்தான் துப்பறிந்து விடுகிறீர்களோ தெரியவில்லை. நான் நடிக்க வருவதற்கு முன்பு லண்டனில் வெஸ்ட்ர்ன் மியூசிக் கத்துக்க போனேன். அப்போ அறிமுகமானவர்தான் ராபர்ட். சும்மா பழகி அப்புறம் காதலாயிடுச்சு. 5 வருஷமா லவ் பண்றோம். இந்த அஞ்சு வருஷத்துக்குள்ளதான் நான் நடிகையானேன். அவர் மியூசிக் டைரக்டர் ஆனார். சமீபத்துல இந்தியா வந்தார். அப்போ என்னோட சூட்டிங் வந்தார். வெற்றிச்செல்வன் படப்பிடிப்புக்குகூட வந்தார். திருமணம் எப்போ பண்றதுங்றது பத்தி இன்னும் யோசிக்கல. நானும் இந்தி, பெங்காலில நடிச்சிட்டிருக்கேன். அவரும் ஒரு முக்கிய ப்ராஜக்டுல இருக்கார். அடுத்த ஆண்டு கல்யாணம் பண்ணிக்கலாமுன்னு முடிவு பண்ணியிருக்கோம்" என்று படு கேசுவலாக சொன்னார்.
அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ஆப்தே...!!