சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருவர் மட்டுமே நடித்து ஒரு படம் வெளிவந்தது. நடுக் காட்டில் ஒரு சைக்கோவிடம் மாட்டிக் கொள்ளும் ஒரு பெண்ணின் கதை அது. இப்போது ஒருவர் மட்டுமே நடிக்கும் படம் ஒன்று தயாராகி வருகிறது. படத்தின் பெயர் ஹோம் மினிஸ்டர். ஒருவராக நடிப்பவர் சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த். ராஜமாணிக்கம் இயக்குகிறார். பிரிமூஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.
தீவிரவாதிகளால் கடத்தி ஒரு மர்ம பங்காளாவில் அடைக்கப்பட்டிருக்கும் போலீஸ் அதிகாரியான வேணு அரவிந்த் தனி ஆளாக அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதை. படத்தில் அவர் மட்டுமே நடித்திருப்பார் மற்ற கேரக்டர்களின் குரல் மட்டுமே கேட்கும். டிஜிட்டலில் தயாராகிறது இந்த வித்தியாசமான முயற்சி.
அடுத்து, ஆளே இல்லால் படம் எடுப்பாய்ங்களோ...!