என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |
லவ்டுடே, பூமகள் ஊர்வலம், அற்புதம், காதல் சுகமானதே உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர் சிவா, தற்போது ராட்டினம் லவ்ஜோடிகள் லகுபரன் - சுவாதி நடிக்க, லவ்டுடே பாலசேகரனின் இயக்கத்தில் உருவாகி வரும் "ஒருவர் மீது இருவர் சாய்ந்து" படத்தின்மூலம் மீண்டும் தமிழ்த்திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார். இதுநாள்வரை தெலுங்குப்பட உலகிலும், இந்திப்பட உலகிலும் தன் இசை சாம்ராஜ்யத்தை நடத்தி வந்ததோடு, சிவா, இரண்டாண்டு காலம் அமெரிக்காவில் உள்ள வெர்ஜன் ரெக்கார்டிங் கம்பெனியின் ஆல்பம் தயாரிப்புக்காக கீ-போர்டிஷ்ட்டாக பணிபுரிந்து வந்ததாலும் இடையில் கொஞ்சம் காலம் தமிழில் காணாமல் போயிருந்தார்.
சென்னையை சார்ந்த இவர் இனி சொந்த ஊரான சென்னையிலும் தமிழ் சினிமாவிலும் கோலோச்சியே தீருவது எனும் முடிவில் இங்கேயே டேராபோட்டு திரை இசைப்பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஒருவர் மீது இருவர் சாய்ந்து படத்திற்காக பாடலாசிரியர்கள் சினேகன், விவேகா ஆகியோரின் வரிகளில் ஐந்து பாடல்களை உருவாக்கியிருக்கும் சிவா, அவற்றை இந்த ஆண்டின் ஹிட் பாடல்களாக தரும் முடிவில் வெகு ஜோராக உழைத்து வருகிறார்.
கூடவே இந்த ரீ-ரவுண்டில் சிவா எனும் தன் பெயரை ஹரிஹரன்(தன் மூத்த மகனின் பெயர்) என்று மாற்றி அமைத்துக்கொண்டு, மேற்படி இசையமைப்பாளர் ரெடியாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. இதுநாள்வரை பெயரில் சிவனை மட்டும் வைத்துக்கொண்டிருந்த இசையமைப்பாளர் இனி, ஹரியையும், சிவனையும் இணைத்து வைத்துக்கொண்டுள்ளதும் நயம்தானே! நல்லதுதானே!!