தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |
சாமியார் நித்தியானந்தாவை ரகசிய கேமரா மூலம் கண்காணிக்க பிரபல இந்தி சேனல் ஒன்று தயாராகி வருகிறது. ஏற்கனவே ரகசிய கேமராவால் பல சிக்கல்களை சந்தித்தவர் சாமியார் நித்தியானந்தா. தற்போது அந்த சர்ச்சைகள் அடங்கி, மதுரை ஆதீனம் பிரச்னையில் பிஸியாகி விட்டார் நித்தி. இந்நிலையில் அவரை இந்தி டிவி சேனல் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. இந்தி டி.வி. சேனலில் பிரபலமான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ நடந்து வருகிறது. பிரபலங்களை அழைத்து வீடு ஒன்றில் தங்க வைப்பார்கள். அவர்களின் வெளி உலக தொடர்புகள் துண்டிக்கப்படும் செல்போன் வைத்துக் கொள்ளவும் அனுமதி இல்லை. அறைக்குள் ரகசிய கேமரா வைத்து அவர்களின் நடவடிக்கைகளை நடுவர்கள் கண்காணிப்பார்கள். இந்த ஷோவில் நடுவராக இந்தி நடிகர் சல்மான்கான் உள்ளார்.
இந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க நித்யானந்தா சாமியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அழைப்பு வந்ததை நித்யானந்தாவின் உதவியாளர் உறுதிபடுத்தியுள்ளார். ஆனால் ரியாலிட்டி ஷோவில் நித்யானந்தா பங்கேற்பாரா என்பது உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.