'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு அனுஷ்கா நடித்துள்ள படம் ‛மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி'. இப்படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து நவீன் பாலி செட்டி நடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தில் அனுஷ்கா சமையல் கலை வல்லுனராக நடித்துள்ளார். செப்டம்பர் 7ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் டிரைலர் வெளியானதை அடுத்து தற்போது படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள பல்வேறு நகரங்களில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த புரமோஷன் நிகழ்ச்சிகளில் இப்பட நாயகனான நவீன் பொலிஷெட்டி மட்டுமே கலந்து கொண்டு வரும் நிலையில், அனுஷ்கா பங்கேற்கவில்லை. இதேபோல்தான் சமீபத்தில் குஷி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் சமந்தா கலந்து கொள்ளாமல், விஜய் தேவர கொண்டா மட்டுமே கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.