''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
2021ம் ஆண்டிற்கான 69வது தேசிய திரைப்பட விருதுகள் சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த நடிகருக்கான விருது 'புஷ்பா' தெலுங்குப் படத்தில் நடித்ததற்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்டது. 'புஷ்பா' திரைப்படம் செம்மரக் கடத்தலைப் பற்றிய ஒரு படம். படத்தில் அல்லு அர்ஜுன் ஏற்று நடித்த கதாபாத்திரம் ஒரு சமூக விரோதி கதாபாத்திரம். செம்மரங்களைக் கடத்துவது, ஆட்களைக் கொல்வது, காவல் துறையை எதிர்ப்பது என ஒரு முழு 'கிரிமினல்' கதாபாத்திரம். இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்திற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்குவதா என சர்ச்சைகளும் எழுந்துள்ளது.
ஆனால், கிரிமினல் கதாபாத்திரங்களில் நடித்தவர்களுக்கு தேசிய விருதுகளை வழங்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு கூட அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்தவர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கியிருக்கிறார்கள்.
1987ம் ஆண்டு வெளிவந்த தமிழ்ப் படமான 'நாயகன்' படத்தில் மும்பை தாதாவாக நடித்த கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. ஆனால், அதை விட சிறந்த நடிப்பை கமல்ஹாசன் வெளிப்படுத்திய 'சாகர சங்கமம், ஸ்வாமி முத்யம்' ஆகிய படங்களுக்கு தேசிய விருது வழங்கப்படவில்லை.
1994ம் ஆண்டு வெளிவந்த ஹிந்திப் படமான 'பண்டிட் குயின்' படத்தில் கொள்ளைக்காரி பூலான் தேவி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சீமா பிஸ்வாஸ் சிறந்த நடிகைகக்கான தேசிய விருதைப் பெற்றார்.
1997ம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படமான 'களியாட்டம்' படத்தில் மனைவியைக் கொன்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சுரேஷ் கோபி தேசிய விருதைப் பெற்றார்.
அந்தக் காலங்களில் அதைப் பற்றியெல்லாம் யாரும் பெரிதாகப் பேசவில்லை, விமர்சிக்கவில்லை. ஆனால், தற்போது யு டியுப், சமூக வலைத்தளங்கள், டிவி விவாதங்கள் என பலவற்றில் 'புஷ்பா' படத்தில் கிரிமினல் கதாபாத்திரத்தில் நடித்த அல்லு அர்ஜுன் தேசிய விருது பெற்றது குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார்கள்.