சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கவுரவம் என்ற பெயரில் உருவாகி வரும் படத்தின் சூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தில், புதுமுக நாயகி யாமி காயமடைந்தார். மொழி படத்தை இயக்கி பிரபலமானவர் ராதா மோகன். இவர் தற்போது கவுரவம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நாயகனாக அல்லு சிரிஷ், நாயகியாக யாமி கவுதம் நடிக்கின்றனர். யாமி மும்பையை சேர்ந்தவர். கவுரவம் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இந்த படத்தை பிரகாஷ்ராஜ் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு ராஜமுந்திரியில் விறுவிறுப்பாக நடக்கிறது. இதற்காக படக்குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர். பாடல் காட்சியொன்றை படமாக்கியபோது யாமி கவுதம் கீழே விழுந்து காயம் அடைந்தார். பாடல் காட்சியில் யாமி கவுதம் சைக்கிள் ஓட்டி செல்வது போல் படமாக்கினர்.
அப்போது நிலை தடுமாறி சைக்கிலோடு கீழே விழுந்தார். அவருக்கு பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக டாக்டர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. வலி நிவாரண மாத்திரைகளை யாமி சாப்பிட்டு ஓய்வு எடுத்தார். இந்த விபத்தால் சூட்டிங் நிறுத்தப்பட்டது.