Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தம்பி ராமையா இயக்கும் படத்தில் பிரகாஷ் ராஜ் ஹீரோ...!

31 மே, 2012 - 11:24 IST
எழுத்தின் அளவு:

பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் ஆகும் கனவோடு சினிமாவிற்கு நுழைந்த தம்பி ராமையா, உதவி இயக்குநராக களம் இறங்கினார். பின்னர் மனுநீதி என்ற படம் மூலம் இயக்குநராக அவதரித்தார். ஆனால் அந்தப்படம் சரியாக ஓடவில்லை. இதனையடுத்து காமெடி மற்றும் குணச்சித்திர வேடம் ஏற்று நடித்து வந்த தம்பி ராமையா நீண்ட இடைவேளைக்கு பின்னர் வடிவேலுவை வைத்து மீண்டும் இயக்குநராக களம் இறங்கினார். இந்திரலோகத்தில் நா.அழகப்பன்‌ என்ற பெயரில், வடிவேலு மூன்று வித்தியாசமான வேடம் ஏற்று நடித்த அந்தப்படமும் சரியாக ஓடாத காரணத்தால் மீண்டும் நடிப்பிலேயே கவனம் செலுத்தினார். மைனா படம் அவருக்கு ஒரு பெரிய வெற்றி படமாக அமைய, அதற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. தொடர்ந்து ஒஸ்தி, வாகைசூட வா, வேட்டை, கழுகு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதுதவிர டஜன் கணக்கில் கைவசம் படங்கள் வைத்திருக்கிறார்.

இந்நிலையில் தம்பி ராமையா மீண்டும் படம் இயக்க உள்ளார். இப்படத்திற்கு "இரண்டு பாயும் புலியும் ஒரு பச்சைக்கிளியும்" என்று பெயர் வைத்து இருப்பதாகவும், இதில்  ஹீரோவாக பிரகாஷ்ராஜூம், அவருடன் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் மெர்ச்சி சிவாவும், கூடவே படத்தை இயக்குவதுடன் தம்பி ராமையாவும் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் ஹீரோயினாக புதுமுகம் ஒருவர் நடிக்க இருக்கிறார். விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று ‌எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

நம்பியார் - thaanthonimalai upsair,இந்தியா
01 ஜூன், 2012 - 16:06 Report Abuse
 நம்பியார் தைர்யமா நடிங்க பாஸ் ஒன்னும் ஊததாது
Rate this:
ஜெகன் - Tirumangalam ,இந்தியா
31 மே, 2012 - 19:56 Report Abuse
 ஜெகன் ரெண்டாவது கலியாணம் பண்ணதுகப்பறம் உனக்கு டைம் சரி இல்லப்பா..இந்த படமாவது ஊத்தாம ஓடுதான்
Rate this:
ஊத்து ஊத்தப்பன் - manjamaikkan kurukku theru,இந்தியா
31 மே, 2012 - 19:09 Report Abuse
 ஊத்து ஊத்தப்பன் ரெண்டாவது கலியாணம் பணதுகப்பறம் உனக்கு டைம் சரி இல்லப்பா..இந்த படமாவது ஊத்தாம ஓடுதான்னு பாப்போம்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in