ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அஜித் - சிவா நான்காவது முறையாக கூட்டணி அமைந்துள்ள படம் விஸ்வாசம். அஜித் உடன் நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், ஜெகபதி பாபு, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வௌியாகி உள்ள இப்படத்திற்கு இமான் இசையமைக்க, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் டிரைலர் வௌியாகி உள்ளது. 2.15 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த டிரைலரில் அஜித் பக்கா கிராமத்து இளைஞராக தூக்கு துரை என்ற கேரக்டரில் இளமையும், சால்ட் அண்ட் பெப்பர் லுக் கலந்தும் நடித்திருக்கிறார். விவசாயமும், கிராமத்து மண் மணமும் கலந்து பக்கா கிராமத்து கமர்ஷியல் படமாக உருவாகி இருப்பது டிரைலரை பார்க்கும் போதே தெரிகிறது.
வாழ்க்கையில் ஒருமுறை கூட அழாத பணக்காரனும் இல்ல, ஒரு முறை கூட சிரிக்காத ஏழையும் இல்ல, பங்காளிகளா அடிச்சு தூக்கலாமா, என் கதையில நான் வில்லன்டா, ஏறி மிதிச்சனா மூச்சு கூட வாங்க முடியாது, ஒத்தைக்கு ஒத்த வா டா, போன்ற பன்ஞ் டயலாக்குகள், இடம் பெற்றுள்ளன. வௌியான சில நிமிடங்களிலேயே அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்ட்டிங் கொண்டு வந்துவிட்டனர்.
பொங்கல் வௌியீடாக ஜன.,10ம் தேதி படம் வௌியாகிறது. அன்றைய தினம் ரஜினியின் பேட்டயும் ரிலீஸாகிறது.