ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முன்னணி கதாநாயகியாக இருந்த சினேகா, 2012ல் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து ஹரிதாஸ், உன் சமையல் அறையில் ஆகிய படங்களில் கதையின் நாயகியாக நடித்தவர், சிவகார்த்திகேயன் நடிப்பில், மோகன்ராஜா இயக்கிய வேலைக்காரன் படத்தில் கேரக்டர் நடிகையாக உருவெடுத்தார்.
தற்போது தமிழில் படங்கள் இல்லாதபோதும் தெலுங்கு, கன்னடத்தில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதில், தெலுங்கில் அவர் நடித்துள்ள வினய விதேய ராமா என்ற படத்தில் ராம் சரண் நாயகனாக நடித்துள்ளார். வருகிற ஜனவரி 11-ந்தேதி வெளியாகும் இப்படத்தின் புரொமோஷனுக்காக ஐதராபாத் சென்ற சினேகா, இந்த படத்தில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கீ ரோலில் தான் நடித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இந்த படத்திற்கு பிறகு தென்னிந்திய சினிமாக்களில் கேரக்டர் நடிகையாக சினேகா ஒரு பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.