ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல நாடக மற்றும் வெள்ளித்திரை நடிகர் சீனு மோகன் காலமானார். 62 வயதான சீனுவிற்கு இன்று(டிச.,27) அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது.
கார்த்தி நடித்த வருஷம் 16, ரஜினியின் தளபதி படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர் சீனு மோகன். அஞ்சலி, விசில் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால் சினிமா அவருக்கு செட்டாகவில்லை. இதனால் தான் ஏற்கனவே நடித்த நாடக துறையில் கவனம் செலுத்தினார். கிரேஸி மோகன், சீனுவுடன் இணைந்து ஏராளமான மேடை நாடகங்களில் பணியாற்றி உள்ளார். சின்னத்திரையிலும் நிறைய சீரியல்களில் நடித்திருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு கார்த்திக் சுப்பராஜின் இறைவி படத்தில் ரீ-என்ட்ரியானவர், தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, ஸ்கெட்ச், வடசென்னை, கோலமாவு கோகிலா, செக்கச்சிவந்த வானம் போன்ற படங்களில் நடித்தார்.
தொடர்ந்து, சினிமாவில் கவனம் செலுத்தி வந்த சீனுவின் திடீர் மரணம், திரையுலகினரை, குறிப்பாக மேடை நாடகங்கள் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் இடையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.