நடிகை ஸ்ருதிகாவுக்கு வைரஸ் காய்ச்சல் | மறைந்த இயக்குனர் குடும்பத்துக்கு நிதி உதவி: மேடையிலே செக் கொடுத்தார் யோகி பாபு | 'தாய்கிழவி'க்கு முன்னுரிமை ; என் படத்திற்கு தியேட்டர் தர மறுக்கிறார்கள்: ஆரி புகார் | சங்கீதா பற்றி அவதூறு : விஜய்க்கு மாதர் சங்கம் கண்டனம் | ரஜினி, கமல் படத்தை பிலிம் ரோலில் படமாக்கும் நெல்சன் | அறிவித்துவிட்டு 'அப்டேட்' தராத 'ஆசை' | 'எக்கோ' பட இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய தனுஷ் | பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் |

பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து, கடந்த 20-ஆம் தேதி வெளியான படம் 'சீதக்காதி'. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்தும், படம் வெளியான பிறகு 'சீதக்காதி' படத்துக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
இப்படத்தில் விஜய்சேதுபதி சுமார் 30 நிமிடங்களே வருவதை மறைத்து அவர் தான் படத்தின் கதாநாயகன் என்பதுபோல் ஆரம்பம் முதலே பப்ளிசிட்டி செய்தனர். படம் வெளியாவதற்கு முதல்நாள் இந்தப்படத்தில் நான் வெறும் 40 நிமிடங்கள் மட்டும் தான் வருகிறேன் என்றார் விஜய் சேதுபதி.
எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துவிட்டது, கடைசியில் விஜய்சேதுபதியை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதுவே சீதக்காதி படத்துக்கு மைனசாகிவிட்டது.
இப்படத்தின் அதிகபடியான ரன்னிங் டைமும், படத்தின் தோல்விக்கு ஒரு காரணம் என்பதை கருத்தில் கொண்டு, 15 நிமிடங்களுக்கும் அதிகமான காட்சிகளை நீக்கினர். அதாவது 'சீதக்காதி'யின் முதல் ரன்னிங் டைம் 2 மணி 53 நிமிடங்கள் இருந்தது. அதை 2 மணி 30 நிமிடங்களாக குறைத்தனர். அப்படியும் 'சீதக்காதி' படத்துக்கு நன்மை விளையவில்லை. பல தியேட்டர்களில் சீதக்காதியை தூக்கிவிட்டு கனாவை திரையிட்டு வருகின்றனர்.




