ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நாவலை மையமாக வைத்து பல படங்கள் உருவாகி வெற்றியும் பெற்றுள்ளன. அந்தவரிசையில் பல விருதுகளைப் பெற்ற, ப்ராஜெக்ட் ஃ நாவலை மையமாக வைத்து உருவாகி உள்ள படம் ழகரம். பால் டிப்போ கதிரேசன் தயாரிப்பில், நந்தா ஹீரோவாக நடித்திருக்கிறார். தரன் இசையமைக்க, அறிமுக இயக்குநர் க்ரிஷ் இயக்கி உள்ளார்.
ஓர் அதிசயப் புதையலைத் தேடிச்செல்லும் 21ம் நூற்றாண்டு இளைஞர்களின் சாகசக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலத்தில், படித்த இளைஞர்களுக்குப் பரிச்சயமான மென்பொருள்துறை கார்ப்பொரேட் சூழலில் பரபரவென்று தொடங்கும் கதை, வரலாற்றுச் சின்னங்களாக விளங்கும் மகாபலிபுரம், தஞ்சை, கோவை என்று பல்வேறு ஊர்களுக்கு இழுத்துச் செல்கிறது. படத்தில் ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக இருக்கும் என்கிறார் இயக்குநர்
சமீபத்தில் இப்படத்தின் பாடலை இயக்குநர், கவுதம் மேனன் வெளியிட்டார். தற்போது டிரைலர் வெளியாகி உள்ளது.