ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த 2014ல், இயக்குநர் சுசீந்திரன் இயக்கிய 'ஜீவா' படம் வெளியாகி வெற்றி பெற்றது. விஷ்ணு, ஸ்ரீதிவ்யா ஆகியோர் இணைந்து நடித்த இந்தப் படத்தில், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நட்ராஜ், ஒரு பாடலுக்கு நடனமாடி நடித்திருந்தார்.
நான்கு ஆண்டுகள் கடந்து விட்ட சூழலில், 'ஜீவா' படத்தில் ஆடியது தவறானது என நட்ராஜ் கூறியுள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது : என் வாழ்க்கையின்...... ஜீவா படத்தில் பாடலுக்கு நடித்ததூ...., தவறான முயற்சி..... காரணம், சுசீந்திரன் இயக்குனர்...., 'படத்தின் இயக்குநரும், அவருடைய மேனேஜருமான ஆண்டனியும் என்னை ஏமாற்றி விட்டனர்' என பதிவிட்டுள்ளார்.
ஆனால், தான் எப்படி ஏமாற்றப்பட்டோம் என்பதை அவர் விளக்கமாக குறிப்பிடவில்லை. ஒரு 'ரோசா லாசாக்கி போனாளே லேசா' என்ற பாடல் ஜீவா படத்தில் இடம் பெற்றிருக்கும். அந்தப் பாடலில்தான் நடனமாடி நடித்திருப்பார் நட்டி நட்ராஜ். அவர் தற்போது, 'சண்டிமுனி' என்ற படத்தில் நடிகை மனிஷா யாதவுடன் நடித்து வருகிறார்.