ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்க, 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இந்தியன் படத்தின் முதல் பாகம் 1996ம் ஆண்டு வெளிவந்தது. 22 ஆண்டுகள் கழித்து ஷங்கர், கமல்ஹாசன் மீண்டும் இணைகிறார்கள். 'எந்திரன்' படத்தில் கூட கமல்ஹாசன் தான் நடிக்க வேண்டியது. ஆனால், வேறு சில காரணங்களால் அந்தப் படத்தில் ரஜினிகாந்த் நடித்தார்.
கமல்ஹாசனுடன் முதல் முறையாக ஜோடி சேர உள்ள காஜல் அகர்வால் இந்தப் படத்தின் வாய்ப்பை பெரிய வாய்ப்பாக கருதுகிறார். அதற்காக அவர் முறையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம். வர்மக் கலையை அவர் பயின்று வருவதாக செய்தி வெளியான நிலையில், தற்போது இந்தப் படத்திற்காக களரி சண்டைக் கலையை அவர் கற்கப் போகிறாராம். அந்தக் கலை பற்றிய புத்தகங்களை தற்போது படிக்க ஆரம்பித்துள்ள காஜல், விரைவில் அதற்கான முறையான பயிற்சியில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்.