'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
விஜய் சேதுபதியின் 25-ஆவது படமாக பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் 'சீதக்காதி' திரைப்படம் வருகிற 20-ஆம் தேதி வெளியாகிறது. அர்ச்சனா, மவுலி, இயக்குனர் மகேந்திரன், பகவதி பெருமாள், ராஜ்குமார், ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், காயத்ரி சங்கர், கருணாகரன், சுனில், டீகே உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தில் நாடக நடிகராக நடித்திருக்கிறார் விஜய்சேதுபதி.
படத்தில் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் 40 நிமிடங்கள் இடம்பெறுகின்றன. சினிமா நடிகராவதற்கு முன் நாடக நடிகராக தோன்றுகிறார் விஜய் சேதுபதி. அந்த காட்சிகளில் 17 நாடக நடிகர் - நடிகைகளை நடிக்க வைத்திருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கும் நிலையில் 'சீதக்காதி'யில் நடித்துள்ள 17 நாடக நடிகர், நடிகைகளையும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தி வைத்தார்கள் 'சீதக்காதி' படக்குழுவினர்.
''இந்த படத்தில் இவர்களது பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. இவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு கேரக்டரில் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர். அதை நீங்கள் படத்தை பார்க்கும்போது உணர்வீர்கள்.” என்று குறிப்பிட்டார் நடிகர் விஜய்சேதுபதி.