'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் | 'உஸ்தாத் பகத் சிங்' விழாப் பேச்சு : மன்னிப்பு தெரிவித்த பார்த்திபன் | கோடையில் வெளி வர காத்திருக்கும் படங்கள் | பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி |

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும், மற்றொரு தொழிலதிபரான அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும், மும்பையில் நேற்று(டிச.,12) திருமணம் நடந்தது. உலகையே திரும்பி பார்க்கும்படி இந்த திருமணம் மிக பிரம்மாண்டமாய் நடந்தேறியது.
முகேஷ் அம்பானியின் வீட்டில் நடந்த இந்த திருமண நிகழ்வில், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நடிகர் ரஜினியும், தனது மனைவி லதாவுடன் கலந்து கொண்டார்.
நடிகர் ரஜினிகாந்த்திற்கு நேற்று பிறந்தநாள், முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்பதற்காக முன்னரே ரசிகர்களிடம் நான் ஊரில் இருக்க மாட்டேன், என்னை சந்திக்க யாரும் வர வேண்டாம் என பேட்ட இசை வெளியீட்டு விழாவில் கூறினார்.